பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஐபிஎஸ் என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு இயக்குனர் அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் ‘சிந்துபாத்’. ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இதில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் சூர்யா விஜய் சேதுபதியும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யா விஜய் சேதுபதிக்கு சிறந்த அடையாளமாக அமையும்.

சேதுபதி திரைப்படத்தில் எஸ்ஐ-ஆக நடித்த லிங்கா இப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார். விவேக் பிரசன்னா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் முக்கியமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது. டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் இந்த நிலையில் எடிட்டர் ரூபனின் பணி பேசப்பட்டு வருகிறது.

அவர் புதிய கண்ணோட்டத்தில் இக்கதையை எடிட் செய்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிந்துபாத் திரைப்படம் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாகுபலி 2-வை வெளியிட்ட மற்றும் ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தை தயாரித்த கே புரொடக்சன்ஸ் எஸ்.என் ராஜராஜன், சேதுபதி திரைப்படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.