சென்னை, மார்ச் 20:  நேற்று வெளியான நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிக்கான முழு அட்டவணையின்படி,  சென்னையில் மட்டும் 7 போட்டிகள் நடைபெற இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

12-வது (இந்தாண்டுக்கான) ஐபிஎல் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுகிழமை அன்று சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தை காண்பதற்காகவே 12,000 ரசிகர்கள் குவிந்திருந்தது, ரசிகர்களின் ஆதரவுக்கு மிகப்பெரிய சான்று. நடப்பு சீசனுக்கான தொடக்க போட்டி சென்னையில் நடைபெற உள்ளதால், சி.எஸ்.கே. ரசிகர்கள் சொல்லொண்ணா மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிக்கான முழு அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அதன்படி, மார்ச் 23-ம் தேதி தொடங்கி மே 5-ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. நாக்-அவுட் மற்றும் இறுதி ஆட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னை போட்டிகளுக்கான விவரங்கள்

மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மார்ச் 31: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏப்ரல் 6: சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ லெவன் பஞ்சாப்

ஏப்ரல் 9: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏப்ரல் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத்

ஏப்ரல் 26: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ்

மே 1: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ்