புதுடெல்லி, மார்ச் 20: இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ஜூனியர் டேவிஸ் கோப்பை மற்றும் பெட் கோப்பை டென்னிஸ் தொடர்கள், புல்வாமா தாக்குதல் எதிரொலியாக வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஏப்ரல் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையும், பெட் கோப்பை டென்னிஸ் போட்டி ஏப்ரல் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையும் தலைநகர் டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க மத்திய அரசு தடை விதித்து இருப்பதால் இவ்விரு டென்னிஸ் தொடர்களும், தாய்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளது.