சென்னை, மார்ச் 20:கடந்த ஜனவரியில் அண்ணாநகரில் உள்ள அழகுநிலையத்தில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள அழகுநிலையத்தில் ஜனவரி 25-ம் தேதி கத்தியை காட்டி மிரட்டி ரூ.36,000 பணம், 3.5 சவரன் நகையை 5 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்து சென்றது. இது குறித்து, அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, கடந்த 16-ம் தேதி மாணிக்க ராஜ் (வயது 26), வேலய்யா (வயது 28), செல்வா (வயது 25), ஜெஸ்டின் முத்தையா (வயது 46) ஆகிய 4 பேரை கைது செய்னதர்.

இந்தநிலையில், கே.கே.நகரில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த கொம்பைய்யா பாண்டியன் (வயது 29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து நகைகளை மீட்டனர்.