புதுவை, மார்ச் 20:உரிய ஆவணங்கள் இன்றி புதுவைக்கு வேன் மூலம் கொண்டுவரப்பட்ட 250 புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புதுவை மாநிலம் ஈசிஆர் சாலையில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த உதவி தேர்தல் அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பிள்ளை சாவடி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தமிழகத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில்,உரிய ஆவணங்கள் இன்றி 250 புடவைகள் இருந்ததது தெரியவந்ததையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.