சென்னை, மார்ச் 20:திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி காலமானதை அடுத்து, திருவாரூர் தொகுதிக்கு, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், கஜா புயல் பாதிப்பை காரணம் காட்டி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மக்களவை தேர்தலோடு, திருவாரூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதனால், மனுதாரரின் கோரிக்கை நிறைவேறியதாக தெரிவிக்கப்பட்டது இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.