சென்னை, மார்ச் 21:அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் மாற்றாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

நியூஸ்டுடே ஊடக குழுமத்தின் நியூஸ்டுடே டிவி, மாலைச்சுடர் டிவி ஆகிய ஆன்லைன் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளதற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக எங்கள் கட்சியை அவர்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவையும், திமுகவையும் ஒரே நேரத்தில் உங்களால் எப்படி எதிர்க்க முடியும் என்று எழுப்பிய கேள்விக்கு நிச்சயமாக முடியும். இந்தக் கட்சிகள் தவிர்த்த மாற்று அரசை நாங்கள் வழங்க முடியும் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் மத்தியிலும், மாநிலத்திலும் தாங்கள் விரும்பும் அரசை அளிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். மக்களின் இந்த உணர்வு நாங்கள் மாற்றாக உருவாக முடியும் என்ற நம்பிக்கையை எங்களிடம் ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.

மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அரசு ஆட்சி அமைக்க முடியுமா என்ற கேள்விக்கு தேசிய அளவில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றுபட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவேல் ஆகியோரை சந்தித்தது குறித்தும் அவர் பேசினார்.

இந்த சந்திப்புகள் தேவைப்படும் போது 3-வது அணிக்கு பயன்படக் கூடும் என்று அவர் தெரிவித்தார்.

நியூஸ் டுடே டிவி, மாலைச்சுடர் டிவி ஆகியவற்றிற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். கமல்ஹாசன் அறிவித்துள்ள வேட்பாளர்களின் பலர் தங்கள் பிரத்யேக பேட்டிகளை அளித்துள்ளனர். கன்னியாகுமரி வேட்பாளர் எபினேசர் புதுச்சேரி வேட்பாளர் மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர், திருச்சி வேட்பாளர் ஆனந்தராஜா, தூத்துக்குடி வேட்பாளர் பொன்குமரன், தருமபுரி வேட்பாளர் ராஜசேகர், வேலூர் வேட்பாளர் சுரேஷ் ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர்.
கமல்ஹாசனின் பேட்டியை  https://youtu.be/B_qprynsrfs என்ற தளத்தில் காணலாம்.