எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் துவக்கம்

மருத்துவம்

சென்னை, ஏப்.7:
குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவமனையை வீஎஸ்மருத்துவமனை குழுமம் திறந்துவைத்தது. இத்துறையில் உள்ள அனைத்து விதமான மேம்பட்ட சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் வழங்கும் நோக்கத்துடன் இம்மையம் சென்னை எழும்பூரில் நிறுவப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசின்நிதித்துறை மூத்தசெயலர் ஷண்முகம் ஐஏஎஸ் , மற்றும் சென்னை பெருநகர் மேலாண்மை ஆணையர் கார்த்திகேயன் ஐஏஎஸ் ஆகியோர் இம்மையத்தை ,லைஃப் அகெய்ன்ஃபௌன்டேஷன் நிறுவனர்கௌதமிதடிமல்லா மற்றும் டியாரா ஹீமோஃபீலியா மற்றும் புற்றுநோய் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்மற்றும் மேலாண்மை பொறுப்பாளர் அபர்ணா குஹன்ஷ்யாம் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

புற்றுநோய், இந்திய குழந்தைகளிடம் பெருகிவரும் போக்கை குறித்து பல்வேறு சுகாதார நிறுவனங்களும் ஆய்வுகளும் அச்சம் தெரிவிக்கின்றன. நம்நாட்டில் ஐந்து முதல் பதினான்கு வயதுடைய இளஞ்சிறார்கள் உயிரிழப்பதற்கு ஒன்பதாவது முக்கிய காரணியாக புற்றுநோய் விளங்குகிறது. ஆண்டுதோறும் 45000 குழந்தைகள் புதிதாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ளது போல் இந்தியாவிலும் இரத்தப்புற்றுநோயும் நிணநீர்ச்சுரப்பிப்புற்று நோயுமே அதிகம் ஏற்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நாம் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளும் போது, அதில் பெரும்பான்மையாக விளங்கும் குழந்தைகளை பாதுகாக்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகமிகஅவசியம்.