சென்னை, மார்ச் 21: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.75.52 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.52 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.50 காசுகளாகவும் உள்ளது.