சென்னை, மார்ச் 23: தேமுதிக பொருளாளர் பிரேமலதா வரும் 27-ந் தேதி முதல் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். ஏப்ரல் 16 வரை அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற தேர்தலில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் 27-ந் தேதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி வரை தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்வார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.