உமா பாரதி பிஜேபி துணைத் தலைவராக நியமனம்

அரசியல்

புதுடெல்லி, மார்ச் 24:பிஜேபியின் தேசிய துணைத் தலைவராக மத்திய அமைச்சர் உமா பாரதி நியமிக்கப் பட்டுள்ளார்.

உ.பி.யில் உள்ள ஜான்சி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் மத்திய அமைச்சருமான உமா பாரதி, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிஜேபி மத்திய தேர்தல் ஆலோசனைக் குழு கூட்டத்திலும் அக்கட்சி தலைமையிடம் தனது கருத்தை உமா பாரதி வலியுறுத்தினார்.
இந்நிலையில், பிஜேபி கட்சியின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமிக்கப்பட்டார். பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்