புதுடெல்லி, மார்ச் 25: டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு குக்கர்
சின்னம் ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தரப்பு தாக்கல் செய்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. தனது தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று மனுவில் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்கு மாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று நீதிமன்றத்தில் அஜரான தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், டிடிவி தினகரனின் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னம் வழங்க முடியாது என்று கூறினார்.  தேர்தல் ஆணையத்தின் இந்த பதிலால் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள் வெவ்வேறு  சின்னங்களில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எந்த சின்னம் ஒதுக்கினாலும் அதில் போட்டியிடுவோம் என கூறியுள்ளார்.