சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

இந்தியா

சுக்மா, மார்ச் 26: சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற என்கவுண்டரின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பிமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.  இந்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு மாவோயிஸ்டுகளின் 4 உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் உள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.