சென்னை, மார்ச் 26:  அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று 2-வது நாளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் சூறாவளி
பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இன்று 2-வது நாளாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பால் மற்றும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து இன்று சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.

மதியம் 2 மணிக்கு பார்த்தசாரதி கோவியல் பின்புறம் பாரதியார் இல்லத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். சிந்தாதரிப்பேட்டை மார்க்கெட், சூளை போஸ்ட்ஆபீஸ், அயனாவரம், டி.பி.சத்திரம், சிஎம்டிஏ காலனி, புஷ்பாநகர், காமராஜர் காலனி, அசோக்நகர், மாம்பலம் அயோத்தியா மண்டபம், தி.நகர் முத்துரங்கன்
சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் உரையாற்றி மத்திய சென்னை வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோவில், கிண்டி ரேஸ்கோஸ், மத்திய கைலாஷ், குருநானக் கல்லூரி, திருவான்மியூர் மேற்கு அவென்யூ, கலாசேத்ரா ரோடு, சாஸ்திரி நகர், மலர் மருத்துவமனை, ஆர்கே மடம் சாலை, மயிலாப்பூர் மாங்கொல்லை, லஸ்கார்னர், சிஐடி நகர், எஸ்ஐடி கல்லூரி, அரங்கநாதன் சுரங்கப்பாதை, கோவிந்தன் ரோடு, சைதை கடும்பாடியம்மன் கோவில், ஆலந்தூர் சாலை, ஜோன்ஸ்ரோடு, சாரதிநகர் பஸ் ஸ்டாப், கங்கையம்மன் கோவில், ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர், பாரதிநகர், ஏரிக்கரை சாலை, தசரதபுரம் சாலை, ஆற்காடு சாலை, கேகே நகர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு தென்சென்னை அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.