மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வானம் கொட்டும்’

சினிமா

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து தனது உதவியாளர் தனசேகரன் இயக்கும் படத்தைத் மணிரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு, தனசேகரனோடு இணைந்து திரைக்கதையும் மணிரத்னம் எழுதியுள்ளார்.
‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளார். படத்தில் அவர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். சகோதரியாக நடிக்க இருக்கிறாராம்.

தற்போது ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. விக்ரம் பிரபு ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜீ.விக்கு ஜோடியாக மடோனா செபாஷ்டின் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்போது ‘வானம் கொட்டும்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷýட்டிங் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது.