சென்னை, மார்ச் 26: வேட்பாளர்களின் சொத்து மதிப்பில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் முதலி டத்தில் உள்ளார். வேட்பு மனுவில் இவர் தெரிவித்துள்ள கணக்குப்படி மொத்த சொத்து மதிப்பு ரூ.417.48 கோடி. மொத்த கடன் ரூ.154.75 கோடி.

கடும் சர்ச்சைக்கு இடையே சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.79.38 கோடி. மொத்த கடன் ரூ.17.4 கோடி. சர்ச்சைக்குரிய தொகை ரூ.28.25 லட்சம்.கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையின் சொத்து மதிப்பு ரூ.24.8 கோடி. கடன் ரூ.6.59 கோடி. தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரின் சொத்து மதிப்பு ரூ.6.58 கோடி. மொத்த கடன் ரூ.3.27 கோடி. சிதம்பரம் தனி தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனின் சொத்து மதிப்பு 92.44 லட்சம். கடன் ரூ.3.94 கோடி.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.30.33 கோடி என்றும், கடன் ரூ.1.92 கோடி என்றும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.தனக்கு 21,14,57,370 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.8,92,20,200 மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தனது தாயார் ராஜாத்தி அம்மாள் பெயரில் ரூ.1,27,48,413 மதிப்பிலான சொத்துக்களும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் 2 முடிந்து விட்டதாகவும், 4 நிலுவை யில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தூத்துக்குடி பிஜேபி வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனக்கு ரூ.1,50,07,000 மதிப்பில் அசையும்
சொத்துக்களும், ரூ.50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும், கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ.2,11,50,000 மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.