சென்னை, மார்ச் 27: விமான நிலையத்தில் பணியாற்றி வருபவர் சுரேந்திர பிரபு. இவர்பட்டாபிராம் பகுதியைச்சேர்ந்த கார்த்திக் என்பவர் உதவியுடன் 50க்கும் மேற்பட்டவர்களிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர் பணம் வாங்கியவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக பணிக்கான ஆணையை வழங்கியுள்ளார். விமான நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி ஆவணம் கொடுத்த பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.மோசடி செய்த என்ஏடியில் கிளர்க் சுரேந்திரபாபு கைது செய்யப்பட்டுள்ளார்.