சென்னை, மார்ச் 27: அரும்பாக்கத்தில் இன்று காலை சாலையில் நடந்து சென்றவர்
சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். பட்டப்பகலில் இந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எண்ணூரை சேர்ந்தவர் கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவர் இன்று காலை அரும்பாக்கத்தில் பெருமாள்கோயில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை வழிமறித்து நிறுத்தினர். கண் இமைக்கும் நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக வெட்டி வீழ்த்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கிருஷ்ணமூர்த்தியை கே.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதம் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு அரும்பாக்கம் போலீசார் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
பட்டபகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.