சிதம்பரம் மார்ச் 27: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக் கியதும், திருமா வளவனை நாட்டுக்கு அடையாளம் காட்டியதும் நான் தான் என்றும், விடுதலை சிறுத்தை கட்சி நாட்டுக்கு தேவையில்லாத கட்சி என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித் தேவன் எம்பி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு அடையாளம் கொடுத்ததும் முதன்முதலாக வடலூருக்கு அழைத்து வந்து கூட்டம் போட்டு பேச வைத்தது நான் தான் . விடுதலை சிறுத்தை கட்சிக் கொடியை பார்த்தால் மக்கள் முகம் சுளிக்கிறார்கள் அப்படி திருமாவளவன் பயிற்சி கொடுத்திருக்கிறார் விடுதலை சிறுத்தை கட்சி கட்சியல்ல நாட்டுக்கு தேவையே இல்லாத கட்சி. நானும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.

இந்தியாவில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி தான். திமுக தலைவர் ஸ்டாலினை கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது அவரிடம் நான் சொல்லித்தான் துணை முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். இப்பொழுது என்னை பற்றி தவறாக பேசுகிறார்.

ஸ்டாலின் கோபம் குடியை கெடுக்கும். இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுவார்கள் எனக்கு முன்னால் பேசிய திருத்துறைபூண்டி சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பேசினார்.தமிழகத்தில் எட்டு ஆண்டுகளாக நடைபெறும் அதிமுக ஆட்சிக்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பாண்டியன், முருகுமாறன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகர், பாமக நிர்வாகிகள் அருள்மொழி, முருகன், சுரேஷ் தேமுதிக, பிஜேபி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.