காஞ்சிபுரம் மார்ச் 27: காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளனர்.சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர் ராஜ் முதலியாரின் மகன்கள் சரவணா பிரதர்ஸ். இவர்கள் காலம்காலமாக பரம்பரை திமுகவினர். தற்போது காஞ்சி மாவட்ட திமுக செயலாளர், எம்எல்ஏ, மற்றும் நகர செயலாளர்களின் சரியான அணுகு முறை இல்லாததால் இவர்கள் தற்போது அதிமுகவில் இணைய முடிவெடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்திற்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர்கள் திமுகவில் இருந்து கூண்டோடு விலகி 400க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி மேற்குமாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.
சோமசுந்தரம் ஆகியோர் செய்து வருகின்றனர்.