ஏடிஎம்-ல் நிரப்ப கொண்டு சென்ற பணம் பறிமுதல்

சென்னை

சென்னை, மார்ச் 30: மதுரவாயல் ஓடம்மாநகர் சர்வீஸ் சாலையில் நேற்று மாலை 7 மணியளவில் மதுரவாயல் போலீசார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதிலிருந்த ரூ.78 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்து, பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், ஏடிஎம்-களில் நிரப்புவதற்காக கொண்டுசெல்லப்படுவதாக கூறி, அதற்கான ரசீதையும் காண்பித்துள்ளனர்.

ஆனால், அசல் ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தை எடுத்துச்செல்லுமாறு கூறிய அதிகாரிகள், பணத்தை கைப்பற்றி பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.