புதுடெல்லி, ஏப்.8: பிஜேபி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், பென்சன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நதிகளை இணைக்க தனி ஆணையம், வருமான வரி விகிதத்தில் மாற்றம், ஜிஎஸ்டி நடைமுறை எளிதாக்கப்படும் என்பன உள்பட 75 வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
பிஜேபியின் ‘சங்கல்ப் பத்ரா’ எனும் தேர்தல் அறிக்கை இன்று வெளியி டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபி தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

130 கோடி மக்களின் கனவை நனவாக்கும் புதிய இந்தியா என்ற தலைப்பில் 48 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில் முக்கியமான வாக்குறுதிகள் வருமாறு:
* விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை 5 ஆண்டுகளில் திரும்பி செலுத்தும் வகையில் வட்டியில்லா கடன்.
* 60 வயதை கடந்த விவசாயிக ளுக்கு பென்சன் திட்டம்.
* அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவித் திட்டம் விரிவாக்கப்படும். 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
* நீர்ப்பாசன திட்டங்களை முழுமை யாக நிறைவேற்ற உறுதி.

* நதி நீர் இணைப்புக்கு தனி ஆணையம்.
* கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
* அயோத்தியில் சட்டத்துக்குட் பட்டு ராமர் கோவில் கட்ட உறுதி.
* ஊழலற்ற இந்தியாவை உருவாக்க நடவடிக்கை.
* தீவிரவாதத்தை ஒடுக்குவதில் துளியும் சமரசம் இல்லாத செயல்பாடு.
* நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

* மருத்துவம், பொறியியல் கல்லூரி களில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
* பள்ளி, கல்வித்துறைக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* நாடு முழுவதும் 200 கேந்திரிய வித்யாலயா, நவயோதா கல்லூரிகள் உருவாக்கப்படும்.
* ஜிஎஸ்டி நடைமுறை எளிதாக்கப்படும்.
* வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படும்.

* விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
* காவல்துறையை நவீனமயமாக்க நிதியுதவி அளிக்கப்படும்.
* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்படும்.
* முத்தலாக் சட்டம் நிறைவேற்றப் படும்.

* பொது சிவில் சட்டம் உருவாக்கப்படும்.
* மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
* கட்டுமானத்துறை முதலீட்டு மூலதனத்தை ரூ.100 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
* நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டசபை தேர்தல்களை நடத்த ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படும்.