சென்னை, மார்ச் 31: முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் கூடைப்பந்து குழுவினர் சமீபத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான முதலாவது கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 20 அணியினர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற வேலம்மாள் பள்ளி அணிக்குச் சுழற்கோப்பை பரிசளிக்கப்பட்டது. முன்னதாக இப்போட்டியினை ஸ்ரீ சுப்ரமணிய அறக்கட்டளை ஏற்பாடு செய்து தி.நகரில் உள்ள மாநகராட்சித் திடலில் நடத்தியது.
போட்டியில் வென்று சாதனை படைத்த மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகளைத் தெரிவித்தது.