திருவாரூர், மார்ச் 31:  திருவாரூர்- பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணியில் ரெயில் தண்டவாளங்களின் உறுதி தன்மை ஆய்வுக்கு பின் 120 கி.மீ அதிவேக ரெயில் சோதனை ஒட்டம் நடைபெற்றது.

கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்த திருவாரூர் பட்டுக்கோட்டை இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றி அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து திருவாரூர் – பட்டுக் கோட்டை அகல ரெயில் பாதையில் நேற்று 29-ந் தேதி பெங்களூர் ரெயில்வே பாதுகாப்பு துறை முதன்மை ஆணையர் மனோகரன் தலைமையில் ரெயில் பெட்டிகளுடன் அதிவேக ரெயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது .

இந்தப் புதிய அகலப் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் பட்டுக் கோட்டையில் காலை 10.35 மணிக்கு தொடங்கி திருத்துறைப்பூண்டியை வழியாக 120 கி.மீ வேகத்தில் கடந்து திருவாரூர் ரெயில்வே ஸ்டேஷனை 11. 25 க்கு சரியாக 50 நிமிடங்களில் சென்றடைந்தது .

இந்த ஆய்வின்போது முதன்மை நிர்வாக அதிகாரி கட்டுமான பொறியாளர் சுதாகர்ராவ், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி மற்றும் முதன்மை துணை பொறியாளர் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.