சென்னை, மார்ச் 31:
ஐபில் கிரிக்கெட் போட்டிக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட செல்போன் டவர்கள் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே மூன்று செல்போன் நிறுவனங்கள், தற்காலிகமாக
செல்போன் டவர்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்க தகவல்கள் கிடைத்தன.

தற்காலிக செல்போன் குறித்து விசாரனை நடத்திய அண்ணாசதுக்கம் போலீசார் அனுமதியின்றி தற்காலிக செல்போன் டவர் வைத்ததாக வழக்கு பதிவு செய்ததுடன் அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.