சென்னை, ஏப்.12:சென்னை பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 7-ம் தேதிஅன்று மாயமானதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதன்பேரில், பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தியதில், பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 20) சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

விக்னேஷ்வரனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.