ராமநாதபுரம், ஏப்.13:
பிரபல நடிகரும் அதிமுக முன்னாள்  எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் (வயது 46)இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ராமநாதபுரத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ரித்தீஷ் ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.