ஐதராபாத், ஏப்.15: ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள்  சொதப்பினாலும் எஞ்சிய வீரர்கள் பொறுப்புடன் விளையாடி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தனர். பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி, அப்படியே உல்ட்டாவாக தொடக்க வீரர்களை தவிர யாரும்  சோபிக்கவில்லை. அணியின் ஸ்கோர் 106 ரன்களில் இருக்கும்போது, வார்னர் அவுட் ஆனதையடுத்து, 10 ரன்கள்  சேர்ப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 37 ரன்களில் வீழ்ந்தது.

டெல்லி தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் கீமோ பால், கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 4 ஓவர்களில் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கீமோ பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம், 10 புள்ளிகள் பெற்று டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.