குழு ஒத்துழைப்பே வெற்றிக்கு காரணம்: தோனி பெருமிதம்

விளையாட்டு

கொல்கத்தா, ஏப்.15: அணியினர் ஒன்று சேர்ந்து  சிறந்த குழு பங்களிப்பை அளித்ததே வெற்றிக்கு காரணம் என சென்னை அணி கேப்டன் தோனி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவிற்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை மிரள வைத்த இம்ரான் தாஹிர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றி குறித்து தோனி கூறுகையில், ஒரு முழுமையான குழுவாக செயல்பட்டோம். குறிப்பாக, பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. தக்க தருணத்தில் விக்கெட் வீழ்த்தி தாஹிர் அசத்தினார்.
எதிரணியின் கிறிஸ் லைன் அதிரடி காட்டினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. அதேசமயம், பேட்டிங்கில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தியதால் வெற்றி வாய்ப்பை வசப்படுத்தினோம்.

ரெய்னா சிறப்பான பார்ட்னர்ஷிப் அளித்து, நல்லதொரு சேஸிங் செய்ய உறுதுணையான இருந்தார். எதிரணிக்கு ஏற்றவாறு, நாங்கள் எங்களின் திட்டத்தை மாற்றிக்கொண்டே இருந்தோம். விக்கெட்டுகளை பறிக்கொடுத்தாலும், இறுதியில் ஆட்டத்தை தட்டிதூக்கினோம். மொத்தத்தில், இது எங்களின் நல்லதொரு பங்களிப்பு.