சென்னை, ஏப்.15: என்கேஎஃப் – டிஸ்போர்ட், இந்தோ இன்டர்நேஷனல் பிரிமியர் கபடி லீக்கின் (ஐபிகேஎல்) முதல் பதிப்புக்கான தேதிகளைஇன்று அறிவித்தது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் புத்தம் புதிய விளையாட்டு லீக் இதுவாகும். விளையாட்டு வீரர்களின்ஊதியம், பரிசுப் பணம் தவிர, அதன் வருவாயில் ஒரு பகுதியை பகிர்ந்தளிக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் மாபெரும் வீரர் வீரேந்திர சேவாக் லோகோவை வெளியிடும்போது உடனிருந்தார். ஐபிகேஎல், 2019, மே 13- ஜுன் 4 வரை, புனே, மைசூர், பெங்களுரு ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. முதல் சீசனில் மொத்தம் 44ஆட்டங்கள் நடைபெறுகின்றன, எட்டு அணிகள் இடம்பெறுகின்றன, அவற்றுள் 16 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 160 விளையாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர். அனைத்து விளையாட்டு வீரர்களும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கடுமையான தேர்வு  சோதனைகளில் தேர்வு செய்யப்பட்டனர்.