திருவள்ளூர், ஏப்.15:  திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேணு கோபாலுக்கு அதிமுகவினர் தீவிர சூறாவளி போன்று வாக்கு சேகரித்தனர்.

இன்று அதிமுக வேட்பாளர் வேணுகோபால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பட்டரை பெருமந்தூர், பாண்டூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் வெயிலையும் பாராமல் வீடு வீடாக சென்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் அமைச்சர் ரமணா, மாநில எம்.ஜி.ஆர் அணி இணை செயலாளர் எம்.சம்பத் குமார், முன்னாள் நகர மன்ற செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், பூண்டி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுராகாபுரம் சுதாகர், கடம்பத்தூர் ரமேஷ் உட்பட பலர் இருந்தனர்.
அப்பொழுது வேட்பாளர் வேணுகோபால் கூறியதாவது : இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற்று வந்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க முயற்சி செய்வேன், குடிநீர் பிரச்சனை தீர்க்க நதிகளை இணைக்க வேண்டும், தடுப் பணைகளை கட்ட வேண்டும்,பி ரதமர் காஞ்சிபுரம் வந்த போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.