சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வாக்கு சேகரிப்பு

சென்னை தமிழ்நாடு

சிதம்பரம், ஏப்.15: புவனகிரி ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் பொ.சந்திரசேகர் எம்எல்ஏ பாண்டியன் ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பொ.சந்திர சேகர் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து புவனகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தேரி, மேலமணக்குடி, சாத்தப்பாடி, சொக்கன் கொல்லை, நத்தமேடு, எல்லைகுடி, ஜெயங்கொண்டான், பின்னலூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் சேத்தியா தோப்பு, புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்.

அவருக்குஆதரவாக சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் மற்றும் கட்சியினர் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.