மும்பை, ஏப்.15:உலக கோப்பையில் விளையாடுவதற்கு விராட் கோலி தலைமையிலான 15 பேரைக் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு அணியை அறிவித்தது.

இந்த அணியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், தோனிக்கு அடுத்து அணியில் 2-வது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். அம்பத்தி ராயுடு, உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

அணி விவரம் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கேதார் ஜாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, யஷ்வந்தர் சாகல்.
உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந் தேதி முதல் ஜூலை 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.