சென்னை, ஏப்.15:கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றுவந்த வருமான வரி சோதனை இன்று அதிகாலையுடன் நிறைவடைந்தது.

சென்னை மற்றும் நாமக்கல்லை அடுத்த நடுக்கோம்பையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம், நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகிவற்றில் கடந்த 12-ம் தேதி அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர்.

மொத்தம் 10 இடங்களில் கடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனை இன்று அதிகாலையுடன் முடிவடைந்தது. இதில், ரூ.14.18 கோடி ரொக்கப்பணம், ரூ.112 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி யுள்ளது.