பாரிஸ், ஏப்.16: பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரையும், ஊசி கோபுரமும் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தன.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் பொக்கிஷங்களுள் கதீட்ரல் தேவாலயம் ஒன்றான இது கடந்த 1991-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்து பிரான்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.