மத்திய ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு

சென்னை

திருவள்ளூர், ஏப். 16: திருவள்ளூர் ஜே.என் சாலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோர் தலைமையில் மத்திய ஆயுத காவல் படை மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் உள்ளனர்.
இப்பேரணி ஆயில் மில் தொடங்கி ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் நான்கு கம்பெனி மத்திய ஆயுத காவல் படை காவலர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினருக்கும் 400-க்கும் அதிகமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப்படையினர், மத்திய ஆயுத காவல்படையினர் ஆகியோருடன் மாநில போலீசாரும் இணைந்து அந்தந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி. தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இன்று மாலை முதல் சம்பந்தப்பட்ட பூத்களுக்கு பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர்.