சென்னை, ஏப்.16:தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.215 கோடிக்கு மதுவகைகள் விற்பனை ஆகி உள்ளன. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி 16,17,18 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையொட்டி நேற்று அனைத்து கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

வழக்கமாக ரூ. 1 லட்சத்திற்கு விற்பனையாகும் கடைகளில் ரூ. 3 லட்சம் வரை விற்பனை ஆனதாக ஊழியர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 3500க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.215 கோடிக்கு விற்பனை ஆனதாக டாஸ்மாக் அலுவலர் வட்டாரம் தெரிவித்துள்ளது. 3 நாள் கடையடைப்பு என்பதால் குடி பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்கிக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.