சென்னை, ஏப்.16: வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 26-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 15 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது. 2 ஆண்டுகள் ஆகியும் அந்த நீதிமன்றங்கள் தொடங்கப்படாததால் அரசாணையின்படி சிறப்பு நீதிமன்றங்களை துவங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.