தமிழ்ப்பல்கலையில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு

தஞ்சை, ஏப்.16: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ் இனிய நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப்பதிவாளர் முனைவர். ச.முத்துக்குமார், பேராசிரியர்கள் முனைவர் பா.ஜெயக்குமார், முனைவர் சா.இரவி வர்மன் துணைப் பதிவாளர்கள் கோ.பன்னீர்செல்வம், முனைவர் இரா.முரளி, ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.