சென்னை, ஏப்.17: வாக்குச்சாவடிகளில் செல்போன் களுக்கு அனுமதி இல்லை என்பதால் வாக்களிப்பதை யாரும் செல்பி எடுக்க முடியாது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் சுற்றளவில் யாரும் செல்போன்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. பத்திரிகையாளர்களுக்கும் இது பொருந்தும். மேலும் வாக்குச்சாவடிகளில் செல்போன்களை வைத்துச்செல்வதற்கான வசதிகளும் செய்யப்படவில்லை என்றார்.

எனவே நாளை வாக்குப்பதிவின் போது யாரும் செல்போன்களை எடுத்துச்செல்ல முடியாது. செல்போன்களை 100 மீட்டருக்கு அப்பால் யாரிடமாவது கொடுத்துவிட்டு வர வேண்டும் என்றார்.