ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் நீயா-2. இந்தப் படத்தை எல்.சுரேஷ் இயக்கியுள்ளார்.

படத்திற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்ய சமீர் இசையமைத்துள்ளார். அதிக பொருட்செலவில் ஸ்ரீதர் படத்தை தயாரித்துள்ளார். நடிகர் ஜெய்யை காதலிக்க ராய் லட்சுமியும், கேத்தரினா தெரெசாவும் போட்டி போடுகின்றனர்.

இதற்கிடையில் ஜெய்யை பழிவாங்கும் எண்ணத்தில் பாம்பாக ராய்லட்சுமி வருகிறார். இவர்கள் 4 பேருக்கும் என்ன நடந்தது என்பதை சுவராசியமாக படத்தில் இயக்குனர் கூறியுள்ளார். இப்படம் வரும் மே 10-ல் வெளியாகிறது.