சிறுபான்மையினர் ஓட்டு சிதறி விடக் கூடாது: தமீமுன் அன்சாரி

அரசியல்

திருச்சி, ஏப். 17: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன்அன்சாரி திருச்சி ஆழ்வார்த்தோப்பு பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ராகுல்காந்தி தான் பிரதமராக வரவேண்டும். அதன்அடிப்படையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ஆனால் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் நமக்குள் ஒற்றுமையை சீர்குலைத்து விடுவார்கள். ஆகவே சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் ஒரு சதவீதம் கூட சிதறி விடக்கூடாது என்று திருச்சியில் மமமனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன்அன்சாரி பேசினார்.