முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

TOP-6 உலகம்

லிமா, ஏப்.18: பெருநாட்டின் முன்னாள் அதிபரான ஆலன் கார்சியா துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா 1985 முதல் 1990 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் பெரு நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை தொடர்ந்து, அவரை அவரது வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் அவர் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆலன் கார்சியாவின் உயிரிழப்பை பெரு நாட்டின் அதிபர் மார்ட்டின் விஜ்காரியா உறுதி செய்துள்ளார்.