ஈரோடு, ஏப்.18: தமிழகத்தில் இன்று நடந்த மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்த இரண்டு முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்துப் பார்த்ததில் அவரது உயிர் பிரிந்தது தெரியவந்தது.

இதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் வெயில் காரணமாக இதேபோல மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவங்களால் வாக்குச்சாவடிகளில் பரபரப்பு ஏற்பட்டது.