சென்னை, ஏப்.18: தமிழகத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 36.09 சதவீதமாகவும் வாக்குப்பதிவு இருந்தது.

இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் 42.92 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆம்பூரில் அதிகபட்சமாக 50.74 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. குறைந்தபட்சமாக பெரியகுளத்தில் 32.32 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன.