சென்னை, ஏப்.8:
வேலூர் மக்களவை தொகுதியில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் முடிவு செய்யும் என்று தெரிகிறது. இதனிடையே, பணம் பறிமுதல் தொடர்பாக காவல் துறையும் அறிக்கை அளித்து இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருக்கிறார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
தபால் ஓட்டுக்கள் போடுவதற்கு 3,27,903 படிவங்கள் கொடுக்கப்பட் டுள்ளன. இதில் 40,000 படிவங்கள் நிறைவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளன. இதேபோல ஒப்பந்த ஊழியர்கள் வாக்குகளை செலுத்து வதற்காக தேர்தல் பணிச் சான்றிதழ் 2,38,051 படிவங்கள் கொடுக்கப்பட் டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று இந்த ஒப்பந்த ஊழியர்கள் எங்கே பணியில் இருக்கிறார்களோ அங்கே தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள்.

தேர்தல் பணியின் போது ஊழியர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத் துக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை அரசின் சார்பில் வழங்கப்படும். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நஷ்டஈடு தரப்படும். தமிழகத்தில் இதுவரை 113 கோடி ரூபாய் பணமும், 228 கோடி ரூபாய் மதிப்புள்ள 807 கிலோ தங்கம், 482 கிலோ வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் 52 கோடி ரூபாய் பணம் ஆதாரங்களை காட்டிய பின்னர் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.

வேலூரில் பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வரு மான வரித்துறை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்து உள்ளது. அதேபோல காவல் துறை விசாரணை நடத்தி அறிக்கை தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. காவல் துறையும் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர் பாக இதுவரை 40 புகார்கள் வந்தன. அதில் 16 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதி 24 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக 10 புகார்களையும் திமுக 16 புகார்களையும், பிஜேபி 4 புகார்களையும், மார்க்சிஸ்ட் கட்சி 2 புகார்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 புகாரையும் அளித்துள்ளன.
இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.