அடங்கமறு படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்கும் 25-வது படத்தை பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடங்கமறு படத்தை தயாரித்த சுஜாத்தா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவியின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லஷ்மண் 3-வது முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து இந்த படத்தை இயக்க உள்ளார். அந்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்த டி. இமான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். வெள்ளி விழாப்படமாக வெளியாகும் இதில் ஜெயம் ரவி ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.