காபி படத்தில் போலீசாக நடிக்கும் இனியா

சினிமா

வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா. அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது. அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது.

தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியா தற்போது தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடித்துள்ளார். இது குறித்து இனியா கூறியதாவது:- அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும். தமிழில் அழுத்தமாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும்.ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது.

மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் ‘தாக்கோல்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பேமிலி சப்ஜெக்ட் படம் கோவா கேரளாவில் ஷூட்டிங் நடைபெறுகிறது.
கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோட ‘துரோணா’ படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன். கல்வியை மையப் படுத்தி உருவாகிற சப்ஜெக்ட். தமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி. அது காபி படத்தின் மூலம் சரியாயிடும் என்றார்.