அமேதி, ஏப்.20: உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் அனுமதியின்றி பேனர் வைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பிஜேபி சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் மே 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் களை கட்டி வரும் நிலையில், அமேதியில் அனுமதி பெறாமல் பேனர் வைக்கப் பட்டதற்காக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப் படுகிறது. இந்த நோட்டீசுக்கு அவர் 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அவருடைய பதில் திருப்திகரமாக இல்லையெனில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.