சிதம்பரம், ஏப் 20: +2 பொதுத்தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியை சார்ந்த 256 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி என்ற சாதனையை படைத்தனர்.

இப்பள்ளியை சார்ந்த ஸ்வர்ணலதா, என்ற மாணவி 600 மதிப்பெண்களுக்கு 572 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் நகரில் சிறப்பிடம் பெற்றார். 500 மதிப்பெண்களுக்கு மேல் 24 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 39 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் அயராது உழைத்த ஆசிரியர்களை வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் எஸ்.குமார், மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஏ. ரூபியால் ராணி மற்றும் வீனஸ் குழுமப் பள்ளிகளின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மகேஷ் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
சிறப்பிடம் பெற்ற மாணவி ஸ்வர்ணலதாவிற்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.